2025 டிசெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

சுமத்ரா தீவில் பெரும் பேரழிவு

Freelancer   / 2025 டிசெம்பர் 02 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சூறாவளியுடனான கடும் மழையால் ஏற்பட்ட பேரழிவு காரணமாக, சுமத்ரா தீவின் சில பகுதிகளுக்கு மீட்புப் பணியாளர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
அத்துடன், அத்தியாவசிய பொருட்களையோ கொண்டு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பெருநிலப்பரப்புடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், பொது மக்கள் உணவின்றி பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
'சேன்யார்' என அழைக்கப்படும் மிக அரிதான வெப்ப மண்டல புயல், இந்தோனேசியாவில், பேரழிவு தரும் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தை ஏற்படுத்தியது.
 
வடக்கு சுமத்ரா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்கள், உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களைப் பெறும் நோக்கில் மக்கள் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என  உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X