Editorial / 2019 டிசெம்பர் 04 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

சூடானியத் தலைநகர் கார்டூமிலுள்ள தொழிற்சாலையை, வாயுத் தாங்கியொன்றின் வெடிப்பால் ஏற்பட்ட தீயானது நேற்று பற்றிப் பிடித்ததில் 23 பேர் இறந்ததோடு, 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வட கார்டூமிலுள்ள தொழிற்துறை வலயமொன்றில் அமைந்துள்ள பதிகல் தயாரிப்பு பிரிவொன்றிலேயே மேற்படி தீ பரவிய நிலையில் அடர்த்தியான கறுப்புப் புகை மண்டலமானது வான் நோக்கிச் சென்றதாக சம்பவத்தை கண்ணுற்றவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், தீயை அணைக்க தீயணைப்புப்படை இயந்திரங்கள் போராடிய நிலையில் சம்பவ இடத்தை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.
அந்தவகையில், தொழிற்துறை பகுதியொன்றில் தீ ஏற்பட்டதாகவும், அதனால் 23 பேர் கொல்லப்பட்டதாகவும் 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அறிக்கையொன்றில் அமைச்சரவை தெரிவித்துள்ளது.
இதேவேளை, வாயுத் தாங்கியொன்றில் ஏற்பட்ட வெடிப்பொன்றால் தீ ஏற்பட்டதாகக் கூறுகின்ற அமைச்சரவை, சம்பவ இடத்தில் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக் காணவில்லை என சம்பவ இடத்திலிருந்தான ஆரம்பகட்ட அறிக்கைகள் சுட்டிக் காட்டுவதாக கூறியுள்ளது.
இதுதவிர, தீப்பற்றக்கூடிய பதார்த்தங்களும் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அதனாலேயே தீ பரவியதாகவும் தெரிவித்த அந்நாட்டு அரசாங்கம், விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
6 hours ago
03 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
03 Nov 2025