Editorial / 2019 மே 27 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூரத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை, 22ஆக அதிகரித்துள்ளது.
சூரத்- சர்தானா பகுதியில் அமைந்துள்ள 4 மாடிகள் கொண்ட கட்டத்தில், வெள்ளிக்கிழமை (24) ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில், கட்டத்தில் பயிற்சி வகுப்புகளுக்கு வந்திருந்த 14 முதல் 17 வயதுக்கிடைப்பட்ட மாணவர்கள், தீயில் சிக்கி பலியாகினர். இதில், வேறு சிலரும் உள்ளடங்குகின்றனர்.
நேற்று முன்தினம் வரை, உயிரிப்புகளின் எண்ணிக்கை 18ஆக பதிவாகியிருந்த நிலையில், தற்போது உயிரிப்புகளின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது என, தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அத்தோடு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 7 பேர், கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அம்மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து நடந்தபோது, அங்கிருந்து வெளியே வருவதற்குத் தடுமாறிக்கொண்டிருந்த மாணவர்களை, கட்டடத்தின் வெளிப்புறமாக ஏறிச்சென்ற இளைஞரொருவர்அங்கிருந்து, 10 மாணவர்களைக் காப்பாற்றியுள்ளார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த அந்த இளைஞன், “கட்டடத்தில் இருந்து தப்பிக்க, பலர் தடுமாறிக்கொண்டிருந்தபோது, பல மாணவர்கள், மேல் தளத்திலிருந்து கீழே குதித்தனர். பின்னரே, கட்டடத்தில் ஏறி, கட்டடத்தின் பின் வழியாால் முடிந்தவரை மாணவர்களை வெளியேற்றினே். எனினும், பல மாணவர்கள் காப்பாற்றுவதற்கு முன்னர் தீயில் கருகி விட்டனர்” என்று கூறியிருந்தார்.
இந்தத் தீ விபத்து சம்பவத்தையடுத்து, பயிற்சி மய்ய உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கட்டடத்தில், அனுமதி பெறாமல், 2 தளங்கள் கட்டப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago