2025 நவம்பர் 05, புதன்கிழமை

சென்னை தேவாலயங்களுக்குக் கட்டுப்பாடு

Editorial   / 2019 ஏப்ரல் 29 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, சென்னையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்திய சந்தேகநபர்கள், குண்டை தோளில் மாட்டியிருந்த பையொன்றில் வைத்தே வெடிக்க செய்துள்ளார்கள் என்பதால், சபைக்கு வரும் பொது மக்களுக்கு, தோள் பை உள்ளிட்ட பொருள்களை உள்ளே கொண்டுவருவதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது.

அதேபோன்று, மோட்டார் சைக்களில், உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் தேவாலயத்துக்கு உள்ளே உள்ள வாகனத் தரிப்பிடத்துக்குள் நிறுத்துவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர பொலிஸ் துறை அறிவுறுத்தலின் பேரில், இத்தகைய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தேவாலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X