2025 மே 14, புதன்கிழமை

’சைக்’ சிறுகோளை ஆய்வு செய்ய விண்கலன் அனுப்பிய நாசா

Freelancer   / 2023 ஒக்டோபர் 15 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பால் வெளி மண்டலத்தில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கும் வியாழனுக்கும் இடைப்பட்ட தூரத்தில் சிறுகோள்கள், விண்கற்கள் ஆகியவை அதிக அளவில் குவிந்து காணப்படுகின்றன. அங்கு அமைந்துள்ள சிறுகோள்களில் ஒன்றாக 'சைக்' விளங்குகிறது. முழுக்க முழுக்க இரும்பு, நிக்கல் போன்ற உலோகங்களாலான அந்த சிறுகோளை ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டது. அதன்படி ஸ்பெக்ஸ்-எக்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து அந்த சிறுகோளுக்கு விண்கலனை ஏவி உள்ளது.

புளோரிடா மாகாணம் கேப் கேனவேரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்கலன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளது.பூமியில் இருந்து 50 கோடி கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சைக் சிறுகோளை ஆறு ஆண்டுகளுக்குள் சென்றடையும்படி நாசா வடிவமைத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .