2025 மே 05, திங்கட்கிழமை

சொத்துகளை ஒப்படைக்குமாறு முன்னாள் மேயருக்கு உத்தரவு

Freelancer   / 2024 ஒக்டோபர் 23 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூயோர்க் நகரத்தின் முன்னாள் மேயர் ரூடி கியுலியானி, அவர் அவதூறு செய்த  தேர்தல் ஊழியர்களிடம் அவரது அடுக்குமாடி குடியிருப்பு, நகைகள் மற்றும் பிற மதிப்புமிக்க உடைமைகளை ஒப்படைக்குமாறு, அமெரிக்க நீதிபதி, செவ்வாய்க்கிழமை (22) உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, தேர்தல் ஊழியர்களுக்கு செலுத்த வேண்டிய மில்லியன் கணக்கான நட்டஈடு தொகையான 148 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான உடைமைகளை, அடுத்த ஏழு நாள்களில் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக டொனால்ட் டிரம்பின் தனிப்பட்ட வழக்கறிஞராக பணியாற்றிய கியுலியானி, 2020 ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியின் தோல்விக்கு பிறகு வாக்காளர் மோசடி குறித்த ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்ப உதவினார் என்ற குற்றச்சாட்டின் கீழ், அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதில்,  விளையாட்டு நினைவுச் சின்னங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க உடைமைகளை ஒப்படைக்க வேண்டும், அதில் அவரது நியூயோர்க் நகர அடுக்குமாடி குடியிருப்பு, இரண்டு டஜன் ஆடம்பர கடிகாரங்கள் ஆகியவற்றை ஒப்படைக்குமாறு, நீதிபதி  தீர்ப்பளித்தார்.

பாதிக்கப்படோருக்கு வழங்கப்பட வேண்டிய சொத்துகளின் பட்டியலில்,  யாங்கி ஸ்டேடியம் படம், ஒரு சட்டை மற்றும் படம். ஒரு வைர மோதிரம், ஆடை நகைகள் மற்றும் 26 கைக்கடிகாரங்கள்,  ஒரு ரோலக்ஸ், ஐந்து ஷினோலாக்கள், இரண்டு புலோவாக்கள் மற்றும் ஒரு டிஃப்பனி & கோ என்பனவாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X