S.Renuka / 2026 பெப்ரவரி 24 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனப் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காகக் கடந்த 18ஆம் திகதி ஆலயத்திற்குச் சென்றிருந்த தாய்வான் ஜனாதிபதி லாய் சிங் டெ (Lai Ching-te) மீது அதிகாரி ஒருவர் வாந்தி எடுத்துள்ள காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

சம்பவத்தினத்தன்று ஆலயத்துக்குச் சென்ற ஜனாதிபதி லாய் சிங் டெ பக்தர்களுக்குப் பணம் உறைகளை வழங்கியுள்ளார்.
பின்னர் அவர் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, குறித்த ஆலயத்தின் தலைமை அதிகாரி ஒருவர் திடீரென்று வாந்தி எடுத்துள்ளார்.
இச் சம்பவம் காணொளியாக எடுக்கப்பட்டுள்ளது.
காணொளியில் அவர் வாந்தி எடுப்பதைத் தடுக்க முயன்றதைக் காணமுடிந்தது. அதில் ஜனாதிபதி லாய் சிங் டெ மீதும் ஏனைய அதிகாரிகள் மீதும் வாந்தி தெளிக்கப்படுவது தெரிந்தது.
ஜனாதிபதி பொறுப்பை ஏற்பதற்கு முன்னர் லாய் சிங் டெ மருத்துவராகப் பணியாற்றியதால் ஆலயத் தலைவரின் உடல்நலத்தைச் சோதித்துப் பார்த்துள்ளார்.
ஆலயத் தலைமை அதிகாரிக்கு norovirus எனும் நோய் தொற்றியிருந்தது தெரியவந்துள்ளது. தமது குடும்பத்தினரிடமிருந்து அவருக்கு நோய் தொற்றியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தற்போது அவர் நலமாய் இருப்பதாக ஜனாதிபதி லாய் சிங் டெ உறுதிப்படுத்தியுள்ளார்.
சம்பவத்தின் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago