2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

ஜனாதிபதி றௌஹானி மீது நாடாளுமன்றம் அதிருப்தி

Editorial   / 2018 ஓகஸ்ட் 30 , மு.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் ஜனாதிபதி ஹஸன் றௌஹானி மீது, தனது திருப்தியின்மையை, அந்நாட்டு நாடாளுமன்றம் வெளிப்படுத்தியுள்ளது. நாட்டில் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுவரும் பொருளாதாரம் தொடர்பாக, நாடாளுமன்றில் வைத்து ஜனாதிபதி வழங்கிய பதில்களை நிராகரிப்பதற்காக வாக்களித்தே, இத்திருப்தியின்மையை, அது வெளிப்படுத்தியுள்ளது.

ஐந்து ஆண்டுகளாகப் பதவியிலுள்ள ஜனாதிபதி றௌஹானி, முதன்முதலாக நேற்று முன்தினமே (28), நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

வேலைவாய்ப்பின்மை, பொருட்களின் அதிகரிக்கும் விலை, பணப்பெறுமதி வீழ்ச்சி ஆகியன தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடினமான கேள்விகளை, ஜனாதிபதியிடம் எழுப்பினர்.

ஏற்கெனவே, நாட்டின் தொழிலாளர் அமைச்சரையும் பொருளாதார அமைச்சரையும் பதவியிலிருந்து விலக்கியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் கேள்விகளுக்கு ஜனாதிபதி அளித்த பதில்கள் தொடர்பில் திருப்தியடையவில்லை.

பொருளாதாரம் தொடர்பாகக் கேட்கப்பட்ட 5 கேள்விகளில் 4 கேள்விகள் தொடர்பில் தமக்குத் திருப்தியில்லை என, அமர்வின் இறுதியில், அவர்கள் வாக்களித்தனர்.

அத்தோடு, இவ்விடயங்களில் அரசாங்கத்தின் தோல்வியென அவர்கள் கருதும் விடயங்கள், சட்டரீதியான கடமைகளில் அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டதா என்பதை ஆராயவுள்ள அவர்கள், அதன் பின்னர், நாட்டின் நீதித்துறையிடம் முறையிடுவதா, இல்லையா என்ற முடிவை எடுக்கவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X