Editorial / 2026 மே 05 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து 45-ஆவது ஆண்டாகச் சரிவைச் சந்தித்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. (மே 05) ஜப்பானில் 'குழந்தைகள் தினம்' கொண்டாடப்படும் நிலையில், அந்நாட்டு உள்விவகார அமைச்சகம் இந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
14 வயது அல்லது அதற்குக் குறைவான வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கை 1.329 கோடியாக (13.29 மில்லியன்) குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 3.50 இலட்சம் குறைவாகும்.
மொத்த குழந்தைகளில் சிறுவர்கள் 68.1 இலட்சம் பேரும், சிறுமியர் 64.8 இலட்சம் பேரும் உள்ளனர். 12 - 14 வயதுடையவர்கள் 30.9 இலட்சம் பேர்; 0 - 2 வயதுடையவர்கள் வெறும் 21.3 இலட்சம் பேர் மட்டுமே உள்ளனர். இது ஜப்பானில் பிறப்பு விகிதம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் 2025-ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை வாய்ப்பு அறிக்கையின்படி, 4 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடுகளில், தென்கொரியாவிற்கு (10.2%) அடுத்தபடியாக, ஜப்பான் (10.8%) மிகக் குறைந்த குழந்தைகளைக் கொண்ட நாடாகத் திகழ்கிறது.
36 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago