2025 நவம்பர் 05, புதன்கிழமை

ஜெயலலிதா மரண விசாரணையில் ‘சிறப்புக் குழு அமைக்க வேண்டும்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண விசாரணையில் சிறப்பு குழு அமைக்க வேண்டும் என்று அப்பலோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிறுவுநர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

அப்பல்லோ மருத்துவமனைகள் சார்பில் மருத்துவ மாணவர்களுக்காக தொகுக்கப்பட்ட சிறப்பு நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்றுநடந்தபோதே மேற்படி கருத்தை பிரதாப் ரெட்டி வெளிப்படுத்தியிருந்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த பிரதாப் ரெட்டி, “மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு எவ்வாறு உயர்தர சிகிச்சையை நாங்கள் அளித்தோமோ, அதே போன்று ஜெயலலிதாவுக்கும் உலகத்தரத்திலான சிகிச்சையை அப்பல்லோ மருத்துவமனை அளித்தது

பிரசித்தி பெற்ற உள்நாட்டு மருத்துவர்கள் மற்றும் வெளிநாட்டு மருத்துவர்கள் மூலமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதை நானே நேரடியாக கண்காணித்தேன்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் நாங்கள் தெரிவித்த மருத்துவ ரீதியான கருத்துக்கள் சரிவர மொழியாக்கம் செய்யப்படவில்லை. எனவே மருத்துவ கலைச்சொற்கள் அறிந்தவர்கள், நிபுணர்கள் ஆகியோரை கொண்ட சிறப்பு குழு அமைக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணை தொடங்கினால் முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளேன்” என்று கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X