2026 மார்ச் 16, திங்கட்கிழமை

டுபாய், குவைத், சவூதி மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

Freelancer   / 2026 மார்ச் 16 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் டுபாய், குவைத், சவூதி அரேபியா, பஹ்ரைன், கட்டாரை குறி​வைத்து ஈரான் இராணுவம் நேற்று ஏவு​கணை தாக்​குதல்​களை நடத்​தி​யது.

அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் இராணுவத்துக்கு இடையே நேற்று 16 ஆவது நாளாக போர் நீடித்​தது. ஈரானின் பார்சு மாகாண தலைநகர் சிராசு​வில் அந்த நாட்​டின் இராணுவ தளம் உள்​ளது. அங்கு ஏவு​கணை​கள் சேமித்து வைக்கப்பட்​டிருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. இதைத் தொடர்ந்து சிராசு​வில் உள்ள இராணுவ முகாம்​களை குறி​வைத்து அமெரிக்​கா, இஸ்​ரேல் போர் விமானங்​கள் நேற்று தாக்​குதல் நடத்தின.

இதில் ஈரான் இராணுவ தளங்​கள் கடுமை​யாக சேதமடைந்​தன. இதே​போல ஈரானின் இஸ்​ப​கானில் உள்ள இராணுவ முகாம்​களை குறி​வைத்​தும் அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் வான் வழி தாக்​குதலை நடத்​தின. ஈரான் முழு​வதும் இது​வரை 1,400 இற்கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். ஆயிரக்​கணக்​கானோர் காயமடைந்து உள்​ளனர். அமெரிக்​கா, இஸ்​ரேல் தாக்​குதலுக்கு பதிலடி​யாக மத்​திய கிழக்கு நாடு​களில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்​களை குறி​வைத்து ஈரான் இராணுவம் நேற்று ஏவு​கணை தாக்​குதல்​களை நடத்​தி​யது

ஐக்​கிய அரபு அமீரக தலைநகர் அபு​தாபி, டுபாய் பகு​தி​களில் அமெரிக்க விமானப் படைத் தளங்​கள் செயல்​படு​கின்​றன. இந்த தளங்​களை குறி​வைத்து ஈரான் இராணுவம் நேற்று ஏவுகணை​களை வீசி​யது. மேலும் டுபாய் மெரினா கடற்​கரை, அல் சூபவ் பகுதிகளில் ஈரான் ஏவு​கணை​கள் விழுந்து வெடித்​துச் சிதறின.

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் புஜா​யிரா துறை​முகத்​தின் மீது ஈரான் இராணுவம் நேற்று முன்​தினம் ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்தியது. இந்த தாக்​குதலால் துறை​முகத்தை அண்மித்துள்ள எண்ணெய் கிடங்​கு​கள் தீப்​பிடித்து எரி​கின்​றன. அங்கு 2 ஆவது நாளாக நேற்​றும் எண்​ணெய் கிடங்​கு​கள் கொழுந்​து​விட்டு எரிந்தன. தீயை அணைக்க தீவிர முயற்சி மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. 

குவைத்​தில் அமெரிக்க விமானப் படைத் தளம் செயல்​படு​கிறது. அந்த படைத்​தளத்தை குறி​வைத்து ஈரான் இராணுவம் நேற்று 2 ஏவுகணை​களை வீசி​யது. மேலும் குவைத் சர்​வ​தேச விமான நிலை​யத்​தின் மீது ஈரான் இராணுவம் ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்​தி​யது. இதில் விமான நிலை​யத்​தின் ரேடார் கட்​டமைப்பு சேதமடைந்​தது. சவூதி அரேபி​யா​வின் அல் கார்ஜ் நகரில் அமெரிக்க விமானப் படைத்தளம் செயல்​படு​கிறது. அந்த தளத்தை குறி​வைத்து ஈரான் இராணுவம் நேற்று 6 ஏவு​கணை​களை வீசி​யது. மேலும் 2 ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்த முயற்சி செய்​தது. ஈரானின் ஏவு​கணை​கள், ட்ரோன்​கள் நடு​வானில் அழிக்கப்​பட்​டன.

கட்டார் தலைநகர் டோஹா​வில் உள்ள அமெரிக்க விமானப் படைத்​தளம், பஹ்ரைன் நாட்​டின் ஷேக் இசா​வில் உள்ள அமெரிக்க விமானப் படைத்தளம், அந்த நாட்​டின் மனா​மா​வில் உள்ள அமெரிக்க கடற்​படைத் தளத்தை குறி​வைத்து ஈரான் இராணுவம் நேற்று ஏவு​கணை​களை வீசி​யது. அவை நடு​வானில் அழிக்​கப்​பட்​டன. இஸ்​ரேலின் டெல் அவிவ் உள்​ளிட்ட முக்​கிய நகரங்​களை குறி​வைத்​தும் ஈரான் இராணுவம் நேற்று ஏவு​கணை தாக்​குதல்​களை நடத்​தி​யது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X