2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

டிரம்பால் நியமிக்கப்படோருக்கு கொலை மிரட்டல்

Freelancer   / 2024 நவம்பர் 28 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு வன்முறை மற்றும் உயிருக்கு ஆபத்து போன்ற மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர்களது உறவினர்களுக்கும்  மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக,   டிரம்ப் மாறுதலுக்கான (Trump transition- ஆட்சி அதிகாரம் மாறுதல்) செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.

 இதனைத் தொடர்ந்து, இலக்கு வைக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய  சட்ட அமலாக்க மற்றும் பிற அதிகாரிகள் விரைவாக செயற்பட்டனர். 

மேலும், நியூயோர்க்கில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எலிஸ் ஸ்டெபானிக் உள்ளிட்டோருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இவர், ஐ.நா.வின் அடுத்த தூதுவராக செயற்பட இருக்கிறார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .