2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

’ட்ரம்ப் பிறப்பித்த வரிகள் சட்டவிரோதமானவை’

Freelancer   / 2025 ஓகஸ்ட் 30 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
 
அவசரக்கால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ், இந்த வரிகள் அனுமதிக்கப்பட்டன என்ற ட்ரம்பின் வாதத்தை அமெரிக்கப் பிராந்திய மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அவை சட்டத்திற்கு முரணானது என்பதால் செல்லாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. 
 
எனினும் இந்த தீர்ப்புக்கு ட்ரம்ப் நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியும் என்பதற்கு, அவகாசம் அளிக்கும் வகையில் இந்த தீர்ப்பு ஒ க்டோபர் 14 வரை நடைமுறைக்கு வராது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.  (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .