2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

விஷால் – தன்ஷிகா நிச்சயதார்த்தம்

Editorial   / 2025 ஓகஸ்ட் 29 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனக்கும் தன்ஷிகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக விஷால் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.

தன்ஷிகாவை காதலித்து வருவதை சமீபத்தில் உறுதிப்படுத்தினார் விஷால். இதனைத் தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் பலரும் விஷால் – தன்ஷிகா இணைக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். எங்களது திருமணம் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தில் முதல் திருமணமாக நடைபெறும் என்று விஷால் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்திருந்தார்.

இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதாக விஷால் தெரிவித்திருந்தார். அதன்படி தனது எக்ஸ் தளத்தில் விஷால், “இந்த பிறந்த நாளில் உலகின் அனைத்து மூலைகளில் இருந்தும் எனக்கு வாழ்த்து கூறி ஆசீர்வதித்த அனைவருக்கும் நன்றி.

 

இன்று எங்கள் குடும்பங்கள் சூழ எனக்கும் தன்ஷிகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்ற சந்தோஷமான செய்தியை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் உற்சாகத்துடன், நம்பிக்கையுடன், ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் விஷால். இந்த அறிவிப்புக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .