2025 டிசெம்பர் 12, வெள்ளிக்கிழமை

ட்ரம்ப் -மோடி தொலைபேசியில் உரையாடல்

Freelancer   / 2025 டிசெம்பர் 12 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்கா - இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் விரைவில் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் வலுத்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் நேற்று வியாழக்கிழமை தொலைபேசியில் உரையாடி, பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்துள்ளனர்.

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 வீத வரிவிதிப்பு காரணமாக இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் உருவாகியுள்ளது.

மேலும், எச்1பி விசா, பாசுமதி அரிசி வர்த்தகம் ஆகியவற்றிலும் இந்தியாவுக்கு பாதகமான நடவடிக்கை ட்ரம்ப் எடுத்துள்ளார். இதனையடுத்து வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்கும் நோக்கத்தில் இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்தச் சூழலில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் பேசியுள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தையில், இந்தியா - அமெரிக்க கூட்டாண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர் எனவும் வர்த்தகம், முக்கிய தொழில்நுட்பங்கள், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X