2024 பெப்ரவரி 24, சனிக்கிழமை

ட்விட்டர் பயனாளர்களுக்கு நற்செய்தி

Ilango Bharathy   / 2023 மார்ச் 09 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகின் மிகப்பெரும் செல்வந்தரும், டெஸ்லா ,ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகருமான எலோன் மஸ்க் (Elon musk), டுவிட்டரை அண்மையில் கைப்பற்றியதில் இருந்து  பல்வேறு  மாற்றங்களைச் செய்து வருகின்றார்.

குறிப்பாக டுவிட்டர் நிறுவனத்தின் முக்கிய பதவிகளில் கடமையாற்றிவரும் ஊழியர்கள் பலரை பணி நீக்கம் செய்த எலோன், ப்ளூ டிக் கட்டண உயர்வு, ஆட்கள் குறைப்பு, வருவாய் இரட்டிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.

இதனையடுத்து டுவிட்டரில் கட்டணம் இல்லா  ட்விட்டர் பயனாளர்கள் தற்போது 280 எழுத்துக்களையும், கட்டணம் செலுத்திய ப்ளூ டிக் பயனாளர்கள் 4,000 எழுத்துக்களையும் பயன்படுத்தி ட்விட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ப்ளூ டிக் ட்விட்டர் பயனாளர்கள் விரைவில் 10,000 எழுத்துக்களைப்  பயன்படுத்தி ட்விட் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக எலன் மஸ்க்  அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .