2025 மே 16, வெள்ளிக்கிழமை

டிரம்ப்புக்கு 100 ஆண்டுகள் சிறை?

Freelancer   / 2023 ஜூன் 11 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வீட்டின் குளியலறையில் அணு ஆயுதங்கள் தொடர்பான ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளமை யாவரும் அறிந்தது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பிறகும் இரகசிய ஆவணங்களை கையாண்டதாக குற்றஞ் சாட்டப்பட்டார்.

இதுதொடர்பாக அவர் மீது மயாமி நீதிமன்றம் 7 குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்தது. மேலும், டிரம்ப் வீட்டில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து 6 படங்களும் வெளியாகின. அதில், அமெரிக்காவின் அணுசக்தி திட்டங்கள், அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஆயுதத் திறன் பற்றிய தகவல்கள், குறித்த விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் டிரம்ப் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் செவ்வாய் கிழமை (13) டொனால்ட் டிரம்ப் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 100 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் அலுவலகம், மற்றும் அவரது டெலாவர் இல்லத்திலும் ரகசிய கோப்புகள் மற்றும் ஆவணங்கள் உள்ளன என்று டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .