2025 மே 14, புதன்கிழமை

டேனியல் நோபோவா புதிய ஜனாதிபதியாக தெரிவு

Freelancer   / 2023 ஒக்டோபர் 16 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈக்குவடோரின் புதிய ஜனாதிபதியாக டேனியல் நோபோவா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

35 வயதான டேனியல் நோபோவா ஈக்குவடோரின் புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஈக்குவடோரின் புதிய ஜனாதிபதி டேனியல் நோபோவா, 26ஆம் திகதி பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பலவீனமான பொருளாதாரம் மற்றும் அதிகரித்து வரும் குற்றங்கள் மற்றும் வன்முறைகளுடன் போராடி வரும் ஒரு நாட்டை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்குவோம், நாளை முதல் உங்கள் புதிய அதிபராக டேனியல் நோபோவா செயல்படத் தொடங்குகிறார் " என்று நோபோவா கடற்கரை நகரமான ஓலோனில் தனது ஆதரவாளர்களிடம் கூறினார்.

நோபோவா 52% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்ததுடன், அவரை எதிரித்து போட்டியிட்ட லூயிசா கோன்சலஸ் சுமார் 48% வாக்குகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .