Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Freelancer / 2023 ஜூன் 26 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடலுக்குள் உடைந்து கிடக்கும் டைட்டானிக் கப்பலின் சிதிலங்களை பார்க்க டைட்டன் என்ற மினி நீர்மூழ்கி கப்பலில் சென்ற கோடீஸ்வரர்கள் 5 பேர் கப்பல் வெடித்து பலியான சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து டைட்டானிக் படம் எடுத்து புகழ்பெற்ற ஹாலிவுட் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் கருத்து தெரிவித்து உள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில். "டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்திலேயே இந்த விபத்து நடந்து இருப்பது என்னை ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஏற்கெனவே நான் அந்த பகுதிக்கு 33 முறை சென்று வந்து இருக்கிறேன். அங்கு எனக்கு கூட சில பயங்கரமான அனுபவங்கள் ஏற்பட்டன. அந்த பகுதியில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 500 மீட்டர் ஆழம் இருக்கும். அதனால் நீர்மூழ்கி கப்பல் மீது அதிகமான அழுத்தம் இருக்கும். அங்கு ஒவ்வொரு கணமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சிறிய தவறு நடந்தாலும் அட்ரஸ் இல்லாமல் ஆகி விடுவோம்.
டைட்டானிக் கப்பல் மூழ்கிய பகுதியில் இனம்புரியாத அதீதமான ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. வெடித்து சிதறிய டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் புதிய தொழில்நுட்பத்தில் சென்சார்ஸ் உள்ளன. அதற்குள் இருக்கும் மனிதர்கள் விபத்தை முன்கூட்டியே கண்டுபிடித்து இருப்பார்கள். அதில் இருந்து ஜாக்கிரதையாக வெளியேறும் வழிகளும் உள்ளன. ஆனாலும் எதிர்பாராமல் நீர்மூழ்கி கப்பல் வெடித்துவிட்டதால் அவர்கள் எல்லோரும் இறந்து விட்டனர்'' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago