Editorial / 2019 மே 09 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பின்தள்ளி, உலகளவில் அதிகமானோரால் பின்பற்றும் அரசயில் தலைவராக, இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில், பிரதமர் நரேந்திர மோடியை சுமார் 110,912,648 மில்லியன் பேர் பின்பற்றுகின்றனர் என, SEMrush எனும் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.
அதேநேரம் பிரதமர் மோடி சமூக வலைதளத்தில், 13.7 மில்லியன் பின்தொடர்வோரைக் கொண்டுள்ளதாக ஃபேஸ்புக் உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுக்க சுமார் 110 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்வோர் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, டொனால்ட் ட்ரம்ப்பை பின்தள்ளியுள்ளார் என, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை, உலகளவில் சுமார் 96 மில்லியன் பேர் பின்பற்றுகின்றனர். ஆனால், டுவிட்டரில் அதிகம் பேர் பின்பற்றும் அரசியல் தலைவர்களில் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது இடத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
உலகளவில் அதிகம் பேர் பின்பற்றும் அரசியல் தலைவராக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா முதலிடத்தில் இருக்கின்றார். சமூக வலைதளங்களில் பராக் ஒபாமாவை சுமார் 182,710,777 பேர் பின்பற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago