Editorial / 2018 நவம்பர் 29 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வெள்ளை மாளிகைக்கெதிரான நடவடிக்கையொன்றை நேற்று எடுத்துள்ள ஐக்கிய அமெரிக்க செனட், யேமனில் சவூதி அரேபிய தலைமையிலான தலையீட்டுக்கான ஐக்கிய அமெரிக்க இராணுவத்தின் உதவியை நிறுத்தும் நடவடிக்கைகொன்றை முன்னநகர்த்தியுள்ளது.
சவூதி அரேபிய இராணுவத்துக்கான ஐக்கிய அமெரிக்க உதவியை நிறுத்துவது யேமன் யுத்தத்தை மோசமாக்கும் என ஐக்கிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோவும் பாதுகாப்புச் செயலாளர் ஜிம் மட்டிஸும் செனட்டில் வாதாடியிருந்த சில மணித்தியாலங்களில் குறித்த முன்மொழிவுக்கு ஆதரவாக 63-37 என்ற வகையில் செனட் வாக்களித்திருந்தது.
அந்தவகையில், இவ்வாண்டின் ஆரம்பத்தில் குறித்த முன்னநகர்வு தோல்வியடைந்தமைக்கு தலைகீழான நிலைமையாக தற்போது காணப்படுகின்றதுடன், சவூதி அரேபியா தொடர்பில் கடுமையான நிலைப்பாடொன்றை எடுக்குமாறு ட்ரம்ப் நிர்வாகத்துக்கு செனட்டால் விடுக்கப்படும் புதிய அழுத்தமாக நோக்கப்படுகிறது.
சவூதி அரேபியாவை விமர்சித்த ஊடகவியலாளர் ஜமால் கஷொக்ஜி கொல்லப்பட்டமை தொடர்பாகவும் யேமனிய யுத்தத்த்தில் அதிகரித்துவரும் மனிதாபிமான நெருக்கடி தொடர்பாகவும் ட்ரம்பின் எதிர்வினை தொடர்பில் செனட்டர்கள் விசனமடைந்துள்ளனர்.
இந்நிலையில், கருத்துத் தெரிவித்த ஜனநாயகக் கட்சியின் செனட்டர் கிறிஸ் மேர்பி, யேமனிய யுத்தத்தில் முன்னைய ஆண்டுகளில் இல்லாதளவுக்கு அதிகளவான பொதுமக்களை சவூதி அரேபியா கொன்றுள்ளதாகவும் ஜமால் கஷொக்ஜியை கடத்தியக் கொன்றதன் மூலம் பாரிய மூலோபாயத் தவறொன்றைப் புரிந்துள்ளதாகவும் ஆகவே கடந்த சில மாதங்களில் பலதும் மாறியுள்ளதாகவும் எனவேதால் இந்நிலைக்கு வந்ததாகக் கூறியுள்ளார்.
இதேவேளை, கருத்துத் தெரிவித்த குடியரசுக் கட்சியின் செனட்டர் லின்ட்சே கிரஹாம், சி.ஐ.ஏ-யின் பணிப்பாளர் ஜினா ஹஸ்பெல் செனட்டில் விசாரணைக்குள்ளாக்கப்படாததாலும் ஜமால் கஷொக்ஜி கொல்லப்படும் திட்டத்தை சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் அறிந்தாரா என்பது தொடர்பில் விசாரிக்கப்படாததாலேயே மேற்குறித்த முன்மொழிவுக்கு தான் ஆதரவாக வாக்களித்ததாகக் கூறியுள்ளார்.
35 minute ago
37 minute ago
52 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
37 minute ago
52 minute ago
2 hours ago