2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

ட்ரம்ப், ரஷ்யா, சீனா தொடர்பில் ஐரோப்பா கவனம்

Editorial   / 2018 டிசெம்பர் 20 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திரத் தொடர்பாடல்களை, ஹக்கர்கள் புகுந்து களவாடி, அவற்றை வெளியிட்டுள்ளனர். இதன்படி, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் தொடர்பாகவும் ரஷ்யாவும் சீனாவும் தொடர்பாகவும், அவர்கள் தங்களது கவனத்தை வெளிப்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

அவ்வாறானதொரு தொடர்பாடலில், ஜனாதிபதி ட்ரம்ப்பும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையில் பின்லாந்தில் இடம்பெற்ற சந்திப்பை, “ஆகக் குறைந்தது புட்டினுக்காவது அது வெற்றிகரமாக அமைந்தது” என அவர்கள் வர்ணித்துள்ளனர்.

அதேபோன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகளுக்கும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்குக்கும் இடையிலான சந்திப்பின் போது, சீனா தொடர்பான ஜனாதிபதி ட்ரம்ப்பின் நடவடிக்கைகளை, “கொடுமைப்படுத்துதல்” எனவும், அது, “விதிகளில்லாத, கட்டுப்பாடில்லாத குத்துச்சண்டை” போன்றது எனவும் அவர் வர்ணித்தாரெனக் குறிப்பிடப்படுகிறது.

அதேபோல், ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து ஐ.அமெரிக்கா விலகும் முடிவை எடுத்ததுடன், அணுவாயுதத்தை மீண்டும் உற்பத்தி செய்யும் செயற்பாட்டில் ஈரான் ஈடுபடக்கூடுமென, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர் என்பதுவும் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X