Freelancer / 2024 ஒக்டோபர் 24 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனடாவில் வசித்த காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை சம்பவத்தால், இந்தியாவுக்கு கனடாவுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக சொந்த கட்சி எம்.பிக்கள் 24 பேர் போர் கொடி தூக்கியுள்ளனர்.
இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்தது. மேலும் கருத்துக் கணிப்புகளில் ஆளும் கட்சியின் செல்வாக்கு சரிந்து இருப்பது தெரியவந்தது.
அடுத்த தேர்தலில் ஜஸ்டின் தலைமையிலான லிபரல் கட்சி மோசமாக தோற்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஜஸ்டின் மீது எம்.பி.க்கள் சிலர் அதிருப்தி அடைந்து, அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தும் கடிதத்தில் கையெழுத்திட்டு உள்ளனர்.
அந்த கடிதத்தில் பிரதமர் பதவியை ஜஸ்டின் இராஜினாமா செய்ய வேண்டும். அத்துடன், 4ஆவது முறையாக தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.
இதன்படி, 28ஆம் திகதி வரை காலக்கெடு விதித்துள்ளனர். இல்லையேல், குறிப்பிடப்படாத விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும்” என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே லிபரல் கட்சி எம்.பிக்களை ஜஸ்டின் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இக்கூட்டம் 3 மணி நேரம் நடைபெற்றது..
அப்போது ஜஸ்டின் பதவி விலக வலியுறுத்தும் கடிதம் வாசிக்கப்பட்டது. இந்த கூட்டம் முடிந்த பிறகு ஜஸ்டின் கூறும்போது, லிபரல் கட்சி வலுவாகவும், ஒற்றுமையாகவும் இருப்பதாக தெரிவித்தார்.
7 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago