2025 மே 15, வியாழக்கிழமை

தகாத உறவில் திடீர் மரணம்

Freelancer   / 2023 ஜூலை 23 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் நாட்டில் லாகூர் மாகாண பொலிஸ்மா அதிபராக பணியாற்றி வருபவர் ஷெரிக் ஜமால். இவருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். ஆனால், மனைவி, மகளை விட்டு பிரிந்த ஷெரிக் ஜமால் லாகூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியே வசித்து வருகிறார்.

 இதனிடையே, அவருக்கும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்துள்ளனர்.

 இந்நிலையில், லாகூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்   ஷெரிக் ஜமாலும் தேர்தல் ஆணைய பெண் அதிகாரியும்   தனிமையில் இருந்துள்ளனர். அப்போது,   பாலியல் உணர்வை தூண்டும் மாத்திரைகளை ஜமால் அதிக அளவில் சாப்பிட்டுள்ளார். அப்போது திடீரென ஜமாலுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

 இதனால் அதிர்ச்சியடைந்த பெண் அதிகாரி உடனடியாக ஜமாலை உடனடியாக லாகூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜமால் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

 இந்த சம்பவம் குறித்து அறிந்த​ பொலிஸார்,  பெண் தேர்தல் அதிகாரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த ஷெரிக் ஜமால் வசித்து வரும் குடியிருப்பில் சோதனை செய்த பொலிஸார் அங்கிருந்து தடைசெய்யப்பட்ட பாலியல் மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .