2025 மே 16, வெள்ளிக்கிழமை

தண்ணீர் பிரச்சினையால் எல்லையில் பதற்றம்

Freelancer   / 2023 ஜூன் 20 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் ஆற்றில் இருந்து ஈரானுக்கும் தண்ணீர் பாய்கிறது. இந்த நிலையில், நீரைப் பகிர்ந்து கொள்வதில் கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையேயும் ஏற்பட்ட விரிசல் தற்போது வன்முறையாக வெடித்துள்ளது.

இந்த விவகாரத்தில் ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு வேண்டுமென்றே தங்களுக்கு தண்ணீர் வழங்குவதை தடுப்பதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், போதிய மழையின்மை மற்றும் ஆற்றில் நீரின் மட்டம் குறைவாக இருப்பதன் காரணமாக ஈரானுக்கு நீரை வழங்க முடியவில்லை என்று தலிபன்கள் அரசு விளக்கம் அளித்துள்ளது.

எனினும், தண்ணீர் பிரச்சனை காரணமாக ஈரான் - ஆப்கான் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.   இரு நாட்டு இராணுவ வீரர்களும் எல்லையில் மோதிக் கொண்டனர்.  இரு தரப்பும் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .