2025 மே 16, வெள்ளிக்கிழமை

தந்தை முன் மகனை தாக்கிக் கொன்ற சுறா

Freelancer   / 2023 ஜூன் 11 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எகிப்தில் பிரபலமான கடற்பகுதியில் தந்தை கண் முன்னே சுறா மீன் தாக்கி மகன் உயிரிழந்தது சுற்றுலா பயணிகளை அதிர வைத்துள்ளது.

செங்கடலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள எகிப்தின் ஹூர்கடா கடற்கரை நகரம் சுற்றுலாவுக்கு பெயர் பெற்றது. இப்பகுதி கடலில் அதிகளவில் சுறா மீன் தென்பட்டாலும், கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் த்ரில்லாக குளிப்பது வழக்கம். இந்நிலையில், சுறா மீன் தாக்கியதில் விளாடிமிர் போபோவ் என்னும் 23 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தந்தையின் கண் முன்னே விளாடிமிர் சுறா மீன் தாக்கி உயிரிழந்துள்ளார். மேலும், அப்போது, விளாடிமிர் போபோவின் தோழி கடலில் குளித்துக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .