Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mithuna / 2024 பெப்ரவரி 18 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் மசோதாவிற்கு கிரீஸ் பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. பாராளுமன்றத்தில் உள்ள 300 எம்.பி.க்களில் 176 பேர் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே சமயம் கிரீஸ் பிரதமரின் வலதுசாரி ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் பலர் இந்த மசோதாவிற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
இந்த மசோதா அரசிதழில் வெளியான பின்னர் சட்டமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஓரினச்சேர்க்கை ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்றும், இதன் மூலம் எல்.ஜி.பி.டி.(LGBT) உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அதேசமயம் கிரிஸ் நாட்டின் பாரம்பரிய தேவாலய திருச்சபையினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .