2022 டிசெம்பர் 07, புதன்கிழமை

திபெத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அடக்குமுறை அதிகரிப்பு

Freelancer   / 2022 நவம்பர் 23 , பி.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

20ஆவது தேசியக் கட்சி காங்கிரஸைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக சீன ஜனாதிபதியாக ஷீ ஜின்பிங் பதவியேற்றதன் பின்விளைவுகள் திபெத் முழுவதும் பிரதிபலிக்கிறது. 

தனிமைப்படுத்தல் மையங்களில் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றி தெரிவிக்க திபெத்தியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர் என்று திபெத் பிரஸ் தெரிவித்துள்ளது.

தேசியக் கட்சி காங்கிரஸ் காலத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததுடன், கடுமையான பொது முடக்கம் காரணமாக திபெத்தியர்கள் தீக்குளித்திருந்தனர்.

திபெத்திய தலைநகரான லாசா, பூச்சிய கொவிட் கொள்கையின் கீழ் 60 நாட்களுக்கும் மேலாக பூட்டப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் 20 ஆவது தேசியக் கட்சி காங்கிரஸ் திபெத்துடன் ஒத்துப்போகின்றமை இதனம் மூலம் வெளிப்பட்டுள்ளது.

சீனா தனது சொந்தப் பிரதேசம் என்று கூறிக்கொள்ளும் திபெத்தில் அடக்குமுறையும் வற்புறுத்தலும் எப்போதும் உச்சத்தில் உள்ளது. 

தற்போது சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக திபெத்தியர்கள் மற்றும் சீனர்களிடையே ஒற்றுமை அலைகள் எழுவது நம்பிக்கைக்குரிய அறிகுறியாகும் எனவும் இது சீனாவில் தாராளவாத மாற்றங்களைத் திறக்கிறது என்றும் திபெத் பிரஸ் குறிப்பிடுகிறது.

திபெத்தின் பரந்த பகுதிகளை தேசிய பூங்காக்களாக மாற்றும் கொள்கையையும் சீனா பின்பற்றுகிறது.

இது, அதிகமான திபெத்தியர்களை அவர்களின் மூதாதையர் நிலங்களிலிருந்து அகற்றுவதற்கான சாக்குப்போக்காக பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஒக்டோபர் கடைசி வாரத்தில், லாசாவில் வசிக்கும் ஹான் சீனர்கள் மற்றும் திபெத்தியர்கள் கொவிட் முடக்கத்துக்கு எதிராக வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்த போது சீன பாதுகாப்புப் படையினரால் நசுக்கப்பட்டனர்.

ஒகஸ்ட் மாத ஆரம்பத்தில் லாசாவில் சீனாவினால் கொவிட் முடக்கம் அறிவிக்கப்பட்ட போது, தங்களுக்கு தயாராவதற்கான அவகாசம் வழங்கப்படவில்லை என்று லாசா மக்கள் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், அந்த பகுதியிலுள்ள பலருக்கு உணவுப் பற்றாக்குறை உள்ளது என்றும் மருத்துவ சேவையிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

சீனாவினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மிகவும் கடுமையானவை மற்றும் பொது நலனுக்கானவை அல்ல என்பது தெளிவான உண்மையாகும். 


dailymirror.lk
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X