2025 ஜனவரி 25, சனிக்கிழமை

திபெத்தில் மீண்டும் நிலநடுக்கம்

Freelancer   / 2025 ஜனவரி 09 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் தன்னாட்சி பெற்ற பிராந்தியமான திபெத்தில், புதன்கிழமை (8) காலை, மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

திபெத்தின் மடோய் நகரில், உள்ளூர் நேரப்படி மாலை 3.44 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 14 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.

சீனாவின் தன்னாட்சி பெற்ற பிராந்தியமான திபெத்தை,  செவ்வாய்க்கிழமை (7) பயங்கர நிலநடுக்கம் உலுக்கியது. திபெத்தின் புனித நகரங்களில் ஒன்றான ஷிகாட்சேவை தாக்கிய இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 புள்ளிகளாக பதிவானது.

இந்த நிலநடுக்கம் ஷிகாட்சே நகரம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளை கடுமையாக உலுக்கியது. வீடுகள் உள்பட ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 126 பேர் பலியாகினர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

கட்டிட இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருப்பதால் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருவதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

 இதனிடையே திபெத்தில், செவ்வாய்க்கிழமை (7), முதலில் 6.8 புள்ளிகள் என்ற அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து 500க்கும் அதிகமான முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டதாக,சீனாவின் நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 "ஜனவரி 7ஆம் திகதி காலை 8 மணி நிலவரப்படி, மொத்தம் 515 அதிர்வுகள் பதிவாகியுள்ளன. இதில் 488 நிலஅதிர்வுகள் ரிக்டர் அளவுகோலில் 3.0 புள்ளிகளுக்கு கீழே இருந்தன. 24 நிலஅதிர்வுகள் 3.0 முதல் 3.9 புள்ளிகள் வரையிலும், 27 நிலஅதிர்வுகள் 4.0 முதல் 4.9 புள்ளிகள் வரையிலும் பதிவாகின" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X