2025 நவம்பர் 05, புதன்கிழமை

தமிழை பயிற்றுவிக்கக் கோரிக்கை; பதிவிட்ட டுவீட் அகற்றப்பட்டது

Editorial   / 2019 ஜூன் 06 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்மொழியை, மூன்றாவது மொழியாக பிற மாநிலங்களில் பயிற்றுவிக்க வேண்டும் என, பிரதமர் மோடிக்கு, தமிழக முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்து, டுவிட்டரில் பதிவிட்டதை, சில நேரங்களுக்குப் பின்னர் அவர் நீக்கிவிட்டார்.

முதலமைச்சர் பழனிசாமி, நேற்று (05) டுவிட்டரில், மற்ற மாநிலங்களில் படிக்கும் மாணவர்களுக்கு, விருப்ப மொழியாக, தமிழை பயிற்றுவிக்க, மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் உலகின் மிக தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழிக்குச் செய்யும் மிகப் பெரிய தொண்டாக இது அமையும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்த, பிற மாநிலங்களில், தமிழை 3ஆவது மொழியாக்க வேண்டும் எனக் கேட்பதன் மூலம், தமிழகத்தில் 3ஆவது மொழியாக ஹிந்தியைக் கொண்டு வர, முதலமைச்சர் ஒப்புதல் தெரிவிக்கின்றாரா என, தி.மு.க மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

இந்நிலையில் பிரதமருக்குக் கோரிக்கை விடுத்து முதலமைச்சர் பழனிச்சாமி பதிவிட்ட டுவீட், பிற்பகலில் நீக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X