2025 மே 05, திங்கட்கிழமை

தற்கொலைப் படை தாக்குதலில் 6 பேர் பலி, 13 பேர் படுகாயம்

Freelancer   / 2024 செப்டெம்பர் 03 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் மர்ம நபர் தனது உடலில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்ததில், 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2021இல் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து வன்முறை குறைந்துள்ளது. இருப்பினும், இஸ்லாமிய அரசின் பிராந்திய அத்தியாயம் உட்பட பல போராளிக் குழுக்கள் செயலில் உள்ளன.

இந்நிலையில் கபூல் நகரின் தெற்கு புறநகரில் உள்ள கலா பக்தியார் பகுதியில் நேற்று குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது.

அங்கு மர்ம நபர் ஒருவர் தனது உடலில் வெடிகுண்டுகளை பொருத்தி வெடிக்க செய்ததில் 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 13 பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து காபூல் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான் கூறுகையில், "உடலில் வெடிகுண்டு அணிந்திருந்த ஒரு நபர் அதனை வெடிக்க செய்தார். உயிரிழந்தவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவார். காயமடைந்தவர்கள் சரியான நேரத்தில் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர் மற்றும் விசாரணைகள் நடந்து வருகின்றன. குண்டுவெடிப்புக்கு எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை" என தெரிவித்துள்ளார்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X