Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
R.Maheshwary / 2023 ஜனவரி 26 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு சில மனிதாபிமான நடவடிக்கைகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் நிலவும் கடும் குளிர் காலநிலை காரணமாக, போதிய உதவிகள் கிடைக்காததால், அந்நாட்டு மக்கள் தற்போது கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் சில மனிதாபிமான நடவடிக்கைகளில் மக்களுக்கு ஆதரவளிக்க அரசு சாரா நிறுவனங்கள் முன்வந்த போதிலும் தலிபான் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்தின் காரணமாக, இதுபோன்ற அமைப்புகளில் பெண்கள் பணியாற்றுவதைத் தடைசெய்து, நாட்டில் செயல்படும் பல நிவாரண அமைப்புகள் தங்கள் சேவைகளை இடைநிறுத்தியுள்ளன.
அதன்படி, இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் சில மனிதாபிமான நடவடிக்கைகளில் பெண்கள் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு தலிபான் அதிகாரிகள் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும் நாட்டில் பெண்கள் அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரியக் கூடாது என்று விதிக்கப்பட்டுள்ள சட்டத்தை இரத்து செய்ய மாட்டோம் என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago