2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

’தானியங்கி கார்’ திட்டத்தை கைவிடும் ஆப்பிள்

Mithuna   / 2024 பெப்ரவரி 29 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க உலகம் முழுவதும் கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், உலகின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள், மின்சார வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இதில், ஐபோன் (iPhone) எனும் உயர் தொழில்நுட்ப ஸ்மார்ட் போன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனமும் களம் இறங்கியது.

'அட்டானமஸ் வெஹிகிள்' (autonomous vehicle) எனப்படும் ஓட்டுனர் இன்றி தானாக இயங்கும் கார்களை உற்பத்தி செய்யும் திட்டத்தில் ஆப்பிள் ஈடுபட்டு பல பில்லியன் டொலர்கள் முதலீடு செய்தது. சுமார் 2 ஆயிரம் வல்லுனர்கள் இதில் பணியாற்றி வந்தனர்.

இத்தகைய வாகனங்களில் பிற கார்களில் உள்ளதை போல் 'ஸ்டியரிங் வீல்' மற்றும் 'பிரேக்', "கிளட்ச', 'ஆக்சிலரேட்டர்' போன்ற பெடல்கள் இருக்காது. இதன் இயக்கம் 'குரல்' மூலம் இருக்குமாறு உருவாக்கப்பட்டு வந்தது.

ஆனால், இதுவரை இத்திட்டம் எதிர்பார்த்த பலனை தரவில்லை. தானியங்கி காரை உருவாக்க மேலும் பல வருடங்கள் ஆகலாம் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, இந்த தானியங்கி கார் உருவாக்க திட்டத்தை ஆப்பிள் நிறுவனம் கைவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) துறை வளர்ச்சி அடைந்து வருவதால், அதில் முதலீடுகளை செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் இது குறித்து தற்போது வரை அதிகாரபூர்வ கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X