Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 ஜூன் 15 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இதர தினங்களை விட வாரத்தின் முதல் வேலைநாளான திங்களன்று மாரடைப்பு அதிகரிப்பதாக, மருத்துவ ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவல் தந்துள்ளது.
வார இறுதி விடுமுறை முடித்து, திங்கள் கிழமை பிறந்தாலே வயது வேறுபாடு இன்றி சகலரும் சங்கடங்களை உணர்வது வாடிக்கை. திங்களன்று காலையில் பள்ளி செல்லும் குழந்தைகள் திடீர் காய்ச்சலை உணர்வதும், பணிக்கு செல்வோர் திடீர் தலைவலியை உணர்வதும் உண்டு.
விடுமுறையில் ஊறித்திளைத்திருக்கும் உடலும், மனதும் வேலைநாளின் அழுத்தத்தை வெறுப்பதுதான். திங்களன்று சில மணி நேரங்களை பல் கடித்து போக்கிவிட்டால், அதன் பின்னர் இயல்பான செக்குமாடு வாழ்க்கைக்கு பழகி விடுவோம்.
இப்படி சாதாரண தொந்தரவாக எழும், போலி காய்ச்சல், தலைவலிக்கு அப்பால், திங்களன்று அதிகரிக்கும் மெய்யான மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் கவலையுடன் எச்சரித்துள்ளனர்.
சுமார் 10 ஆயிரம் நோயாளிகள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வின் அடிப்படையில் இந்த அதிர்ச்சி உண்மை வெளிப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்தை பின்புலமாக கொண்டு மருத்துவக் குழு, 2013 -2018 ஆண்டுகளுக்கு இடையே அயர்லாந்தின் மருத்துவமனைகளை நாடிய 10,528 மாரடைப்பு நோயாளிகள் மத்தியில் ஆய்வு மேற்கொண்டது. அதில் கிடைத்த தரவுகளில் ஒன்று, மருத்துவர்களுக்கு ஆச்சரியமளித்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
8 hours ago