Ilango Bharathy / 2023 மே 16 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருடனை பிடிக்க பொலிஸாருக்கு மாடுகள் உதவியுள்ள சம்பவம் அமெரிக்காவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் கார் ஒன்றை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றுள்ளார்.

அவரை பின்தொடர்ந்து பொலிஸாரும் சென்றனர். ஆனால் அவர் எங்கோ சென்று மறைந்திருக்கிறார். இதனால் அந்த புல்வெளி பகுதியில் அவர் எங்கு இருக்கிறார் என பொலிஸார் குழம்பி போய் உள்ளனர்.
அப்போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் ஓடிச் சென்று ஒரு புதர் அருகே நின்றுள்ளது. இதனை கண்டு சந்தேகம் அடைந்த பொலிஸார் அங்கு சென்று பார்த்தபோது அங்கு அந்த மர்ம நபர் மறைந்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து பொலிஸார் காவல் நிலையம் அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தை பொலிஸார் முக புத்தகத்தில் தெரிவித்துள்ள நிலையில் இது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago