2025 மே 16, வெள்ளிக்கிழமை

திருமண பஸ் விபத்து : 10 பேர் பலி

Freelancer   / 2023 ஜூன் 12 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 25 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் வைன் கவுன்ரி ட்ரைவ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11)  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருமண நிகழ்வொன்றில் பங்குபற்றிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் பயணம் செய்த பஸ்ஸே இவ்வாறு விபத்துகுள்ளாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து 58 வயதான பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.   ​​​​​மேலும் இவ்விபத்து  ஏற்பட்ட சூழ்நிலை குறித்து  விசாரணை நடத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .