2025 நவம்பர் 05, புதன்கிழமை

திருமண வரவேற்பு வைபவம்: ’இரத்தக் களறியானது’

Editorial   / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நிரம்பிய திருமண வரவேற்போன்றின் மீதான தாக்குதலில் தற்கொலைக் குண்டுதாரியொருவர் 63 பேரைக் கொன்றதாகவும், 182 பேரைக் காயப்படுத்தியதாகவும் உள்நாட்டமைச்சு இன்று (18) தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு, ஐக்கிய அமெரிக்க ஆதரவுடனான ஆப்கானிஸ்தானின் அரசாங்கத்துடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் குறித்த தலிபானின் கடப்பாடுக்கு மாறாக ஐக்கிய அமெரிக்க படைகள் வெளியேறுவது தொடர்பில் பேரம்பேசி இணக்கமொன்றை ஏற்படுத்துவது குறித்து தலிபானும், ஐக்கிய அமெரிக்காவும் முயல்கையிலேயே நேற்றிரவு குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இத்தாக்குதலுக்கான உரிமையை மறுத்துள்ள தலிபான், சிறுபான்மை ஷியா புறநகரின் மேற்கு காபூலிலுள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற குறித்த குண்டு வெடிப்பைக் கண்டித்துள்ளது.

இந்நிலையில், இத்தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு நேற்று மாலையில் உரிமை கோரியிருந்தது.

இதேவேளை, பாதிக்கப்பட்டோரில் சிறுவர்களும், பெண்களும் உள்ளடங்குவதாக உள்நாட்டமைச்சின் பேச்சாளர் நஸ்ரத் றஹிமி தெரிவித்துள்ளார். இத்தாக்குதலிருந்து மணமகனும், மணமகளும் தப்பித்துள்ளனர்.

காபூலில் கடந்தாண்டு நவம்பரில் திருமண மண்டபமொன்றில் இடம்பெற்ற தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

பாகிஸ்தானிலுள்ள பள்ளிவாசலொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குண்டுத் தாக்குதலொன்றில் தலிபான் தலைவர் ஹைபதுல்லா அக்ஹுன்ட்ஸடாவின் சகோதரர் கொல்லப்பட்ட நிலையிலேயே மேற்கூறப்பட்ட தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நான்கு பேர் கொல்லப்பட்டதுடன், 20 பேர் காயமடைந்த இத்தாக்குதலுக்கு எவரும் உரிமை கோரியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அமெரிக்காவுக்கும், தலிபானுக்கும் கடந்தாண்டு இறுதி முதல் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் அண்மைய மாதங்களில் மோதல்களுக்கும், குண்டுத்தாக்குதல்களுக்கும் குறைவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வட பால்க் மாகாணத்தில் வீதியோரக் குண்டொன்று வெடித்து வான் வெடித்ததில் 11 பொதுமக்கள் நேற்றுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X