2025 நவம்பர் 05, புதன்கிழமை

தீபா வெறுப்பு: கட்சி கலைப்பு

Editorial   / 2019 ஜூலை 30 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொண்டர்கள் தொந்தரவு செய்வதாகக் கூறி கட்சியை கலைப்பதாக முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா அறிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து, அ.தி.மு.கவை காப்பாற்ற போவதாகக் கூறி, அவரின் அண்ணன் மகள் தீபா, ஜெ. தீபா பேரவை என்ற அமைப்பை ஆரம்பித்தார். பின்னர், அதை, எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்று மாற்றினார். எனினும், கட்சி ஆரம்பித்து 2 ஆண்டுகள் ஆகியும், அவரது செயற்பாடுகள், கொள்கைகள் என்ன என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.

இந்நிலையில், தனது பேஸ்புக் பக்கத்தில் தீபா வெளியிட்ட பதிவில், “எங்களை விடுங்கள். பேரவை பேரவை என தொந்தரவு செய்யாதீர்கள். அ.திமு.க. அல்லது உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு கட்சியில் போய் சேர்ந்து கொள்ளுங்கள். தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்யாதீர்கள். முன்னதாகவே, அ.தி.முக.வுடன் பேரவையை இணைத்து விட்டேன். அரசியல் தொடர்பாக யாரும் என்னை அழைக்க வேண்டாம். அழைத்தால் பொலிஸில் புகார் அளிப்பேன். எனக்கென்று குடும்பம் உள்ளது. அதுதான் முக்கியம். எனக்கு அரசியல் வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சிறிது நேரத்தில், அந்தப் பதிவை, அவர் நீக்கிவிட்டார்.

பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், “அரசியலுக்கு வந்ததால், நெருக்கடி வேதனை ஏற்பட்டது. பெண்கள், அரசியலில் இருக்க வேண்டும் என்றால், தரக்குறைவான விமர்சனம் இருக்கக்கூடாது. கட்சி ஆரம்பித்த பிறகு, ஏமாற்றிவிட்டனர். என்னை வழிநடத்த சரியான நபர்கள் யாரும் இல்லை. இனிமேல் எப்போதும் அரசியலுக்கு வர மாட்டேன். ஜெயலலிதா சொத்துக்கு ஆசைப்பட்டது இல்லை. வேண்டும் என்றால், அப்போதே கேட்டிருப்பேன். என் வீட்டு முன் நின்று கட்டாயப்படுத்தி அழைத்ததால் தான் அரசியலுக்கு வந்தேன். அரசியலுக்கு வந்ததே தவறு என பல முறை யோசித்துள்ளேன்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X