Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Freelancer / 2024 ஓகஸ்ட் 26 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
“அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தூக்கத்தில் இருக்கிறார். இதனால், 3ஆம் உலகப்போர் மூளும் அபாயம் உள்ளது” என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள சண்டை குறித்து, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ள டொனால்ட் டிரம்ப் கூறுகையில்: “மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ச்சியாக குண்டுகள் வீசப்படுவது கவலை அளிக்கிறது. இதே நிலை நீடித்தால் 3ஆம் உலகப்போர் மூளும் அபாயம் உள்ளது.
இது குறித்து அமெரிக்கா சார்பில் பேச்சுவார்த்தை நடத்துவது யார்? அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தூக்கத்தில் இருக்கிறார். அவர் கலிபோர்னியா கடற்கரையில் தூங்கி கொண்டு இருக்கிறார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நவம்பர் 5ஆம் திகதி வரலாற்றில் முக்கிய நாள்” இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையே சண்டை அதிகரித்த நிலையில், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் சீன் சாவெட் கூறியதாவது:
“அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறார். இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம். மேலும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்” என்றார்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
27 minute ago
53 minute ago
1 hours ago