Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜனவரி 15 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்கொரியா நாட்டில், பதவி நீக்கத்துக்கு ஆளான ஜனாதிபதி யூன் சாக் யோல், இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளார்.
இதை அந்த நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஜனாதிபதி மாளிகை வளாகத்துக்கு முன்பாக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று (15) அதிகாலை குவிந்து, அவரை கைதுசெய்தனர்.
இதைதொடர்ந்து, கறுப்பு நிற எஸ்யூவி வாகனங்கள், சைரனை ஒலிக்க செய்தபடி, ஜனாதிபதி மாளிகை வளாகத்தை விட்டு வெளியேறின.
கடந்த மாதம், அந்த நாட்டில் இராணுவ சட்டத்தை அமுல்படுத்தும் ஜனாதிபதியின் முயற்சியால் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பையடுத்து, யூன் சாக் யோல் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அத்துடன், அவரது அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன.
இந்தச் சூழலில், அவரை கைது செய்ய இரண்டாவது முறையாக அதிகாரிகள் இன்றிறு (15) முயற்சித்தனர். அது தொடர்பாக ஊழல் தடுப்பு பிரிவின் உயர்மட்ட அதிகாரிகள், ஜனாதிபதி மாளிகை அதிகாரிகளுடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி யூன் சாக் யோலை கைது செய்தனர். இராணுவ சட்டத்தை அமுல்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்கொரியாவில், கைதாகும் முதல் தென் கொரிய ஜனாதிபதி என யோல் அறியப்படுகிறார்.
இறுதிவரை இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக போராடுவேன் என யூன் சாக் யோல் கடந்த மாதம் கூறியிருந்தார்.
சியோல் நகரில் உள்ள ஹன்னம்-டோங் இல்லத்தில் அவர் கடந்த சில வாரங்களாக தங்கி இருந்தார். இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தியது நியாயம் என்றே சொல்லி இருந்தார். அதே நேரத்தில் இது தொடர்பான விசாரணைக்கு தானாக முன்வந்து யூன் சாக் யோல் ஆஜராவார் என அவரது தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
இருப்பினும் இது தொடர்பாக ஊழல் தடுப்புப் பிரிவு அனுப்பிய சம்மனுக்கு அவர் ஆஜராகவில்லை.
இந்தச் சூழலில், கடந்த 3ஆம் திகதி அவரை கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் அதை தடுத்தனர். இந்நிலையில், பெரிய படையை திரட்டி இன்று (15) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
8 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
49 minute ago
1 hours ago