2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

தென்சூடானில் சிறுவர் போராளிகள் விடுவிக்கப்படார்?

Editorial   / 2018 நவம்பர் 08 , மு.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்சூடானின் சிவில் யுத்தத்தில் ஈடுபடும், ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள சிறுவர் போராளிகள், விரைவில் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு என, ஐக்கிய நாடுகளின் தூதுவரொருவர் தெரிவித்தார். அவர்களைப் பராமரிப்பதற்கான நிதி, உதவி அமைப்புகளிடம் இல்லாத காரணத்தாலேயே, இந்நிலை காணப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

சுமார் 5,000 பேரைக் கொன்றுள்ள இந்த யுத்தத்தை நிறுத்துவதற்கான சமாதான ஒப்பந்தத்தில், தென்சூடான் அரசாங்கமும் ஆயுததாரிகளும் கையெழுத்திட்டுள்ள போதிலும், முரண்பாட்டில் சிக்கியுள்ள சிறுவர்கள் இன்னமும் அதில் சிக்கியே காணப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கெனவே வெளியான தகவல்களின் படி, இவ்வாண்டு ஜனவரியிலிருந்து 900 சிறுவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, இவ்வாண்டு முடிவுக்குள், மேலும் 1,000 பேர் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், இன்னும் பல்லாயிரக்கணக்கானோர், தொடர்ந்தும் சிறுவர் போராளிகளாகவே காணப்படுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X