Editorial / 2019 மே 23 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவூதி அரேபியாவின் நஜ்ரான் விமான நிலையத்தின் மீது ஈரானால் ஆதரவளிக்கப்படும் யேமனிய ஹூதிகள் ட்ரோன் தாக்குதலொன்றை மேற்கொண்டதாக ஹுதிகளின் அல் மஸீரா தொலைக்காட்சி நேற்று அதிகாலை தெரிவித்துள்ளது.
போர் விமானங்களைக் கொண்டிருந்த விமானக் கொட்டகையை தாம் இலக்கு வைத்ததாக ஹுதிகள் தெரிவித்துள்ளனர். எவ்வாறெனினும், சேதம் அல்லது உயிரிழப்புகள் தொடர்பாக உடனடியாக அறிக்கைகள் எதுவும் வெளியாகியிருக்கவில்லை.
இதேவேளை, யேமனிய எல்லைக்கருகிலுள்ள சவூதி அரேபியாவின் நஜ்ரான் விமானநிலையத்திலுள்ள ஆயுதக் கிடங்கொன்றை தமது ட்ரோனொன்று தாக்கியதால் தீப்பிடித்ததாக நேற்று முன்தினம் ஹூதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நஜ்ரான் மாகாணத்திலுள்ள சிவிலியம் இடமொன்று வெடிபொருட்கள் அடங்கிய ட்ரோனால் இலக்கு வைக்கப்பட்டதாக சவூதி அரேபியா தலைமையிலான இராணுவக் கூட்டணி கூறியுள்ளது.
இதேவேளை, இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மக்காவை நோக்கி ஏவப்பட்ட ஹூதி ஏவுகணைகளை சவூதி அரேபிய பாதுகாப்புப் படைகள் இடைமறித்ததாக கடந்த திங்கட்கிழமை சவூதி அரேபியா தலைமையிலான இராணுவக் கூட்டணி தெரிவித்திருந்த நிலையில், அவ்வாறு செய்யவில்லை என ஹூதிகள் மறுத்திருந்தனர்.
எவ்வாறாயினும், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், யேமனிலுள்ள முக்கியமான 300 இராணுவ இலக்குகளை தாம் தாக்குவோம் என கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹூதிகள் தெரிவித்திருந்தனர்.
யேமனின் தலைநகர் சனாவில், ஹூதிகளால் 2014ஆம் ஆண்டு இறுதியில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட சர்வதேச ரீதியில் அங்கிகரிக்கப்பட்ட அரசாங்கத்தை மீளப் பதவியில் அமர்த்துவதற்கு முயல 2015ஆம் ஆண்டு யேமனில் தலையிட்ட மேற்குலகத்தால் ஆதரவளிக்கப்படும் சுன்னி முஸ்லிம் நாடுகளின் கூட்டணிக்கு சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் தலைமை தாங்குகின்றன.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago