2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

நடுவானில் வெடித்து சிதறிய வடகொரியா செயற்கைக்கோள்

Freelancer   / 2024 மே 28 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியா உளவு செயற்கைக்கோள் நடுவானில் வெடித்து சிதறியதாக வடகொரியாவின் அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. கடந்த நவம்பரில் வடகொரியா தனது முதல் இராணுவ உளவு செயற்கைக்கோளை பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியது.

இதற்கு தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. விரைவில் 2ஆவது உளவு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என்று வடகொரியா அறிவித்தது.

இந்நிலையில், வடகொரியாவின் 2ஆவது உளவு செயற்கைக்கோள் விண்ணில் ஏவும் முயற்சி தோல்வி அடைந்தது. உளவு செயற்கைக் கோளை ஏற்றிச்சென்ற ரொக்கெட் நடுவானில் வெடித்துச் சிதறியது.

வடகொரியாவின் வடமேற்கு விண்வெளி மையத்தில் இருந்து புதிய ரொக்கெட்டில் உளவு செயற்கைக்கோள் ஏவப்பட்டது. என்ஜின் கோளாறு காரணமாக நடுவானில் ரொக்கெட் வெடித்ததாக வடகொரியாவின் மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், திரவ ஒக்சிஜன், பெட்ரோலிய இயந்திரத்தில் வெடிப்பு ஏற்பட்டது முதல்கட்ட பரிசோதனையில் தெரியவந்ததாக தேசிய விண்வெளி தொழில்நுட்ப நிர்வாகத்தின் துணை இயக்குனர் தெரிவித்தார்.

மேலும், இந்த ஏவுகணை கடலில் விழுந்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X