2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

நாடு திரும்பினார் கிம் ஜொங்-உன்

Freelancer   / 2023 செப்டெம்பர் 18 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கடந்த வாரம் தலைநகர் பியாங்யாங்கில் இருந்து சிறப்பு ரயில் மூலம் ரஷ்யா சென்று ரஷ்ய ஜனாதிபதி புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி ரஷ்யாவிற்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

 அதன்பிறகு ரஷ்யாவின் ஆயுத தொழிற்சாலைகளுக்கு சென்று, ஆயுதங்களை பார்வையிட்டார். பின்னர் ரஷ்யாவின் முக்கிய விண்வெளி தளங்களுக்கும் சென்று அவர் பார்வையிட்டார். மேலும் ரஷ்யாவுக்கு ஆயுத பரிமாற்ற ஒப்பந்தம், ராணுவத்துக்கு இடையேயான மூலோபாய மற்றும் தந்திரோபாய ஒருங்கிணைப்பு போன்றவை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தனது 6 நாள் ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். கொரோனா ஊரடங்குக்கு பின்னர் கிம் ஜாங் உன் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .