S.Renuka / 2026 பெப்ரவரி 25 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மையில் இளைஞன் ஒருவன் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள அதோபார் ட்ரம்பின் வீட்டிற்குள் எச்சரிக்கை விடுத்து 'ஷாட்கன்' துப்பாக்கி மற்றும் பெட்ரோல் கேனுடன் நுழைய முயன்றான்.

அவன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதால், சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டுகள் அவனைச் சுட்டுக்கொன்றனர்.
இந்த சம்பவத்தின் போது ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி வெள்ளை மாளிகையில் இருந்துள்ளனர்.
குறித்த இளைஞன் 21 வயதான ஆஸ்டின் டக்கர் மார்ட்டின் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேசியுள்ளதாவது, “நான் இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் இருப்பேன் என தெரியவில்லை. எனக்காகத் துப்பாக்கியுடன் எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் என்று பார்த்தீர்களா?" என்று நகைச்சுவையாக பேசியுள்ளார்.
அத்துடன், ஆபிரகாம் லிங்கன், கென்னடி போன்ற மிகப்பெரிய செல்வாக்குள்ள தலைவர்களையே இதுபோல இலக்கு வைப்பார்கள். ஒருவேளை நான் கொஞ்சம் குறைவான செல்வாக்குள்ள தலைவராக இருந்திருக்கலாமோ என்னவோ? கொஞ்ச காலம் ஒரு சாதாரண அதிபராக இருக்க முயற்சிப்போம்" என்று கூறியுள்ளார்.
மேலும், கொல்லப்பட்ட இளைஞன் மார்ட்டின், சமீபத்தில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் இருந்தது அவனது குறுஞ்செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது.
15 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
2 hours ago