2024 ஒக்டோபர் 13, ஞாயிற்றுக்கிழமை

நெருப்பு வளையங்களை சுழற்றி கின்னஸ் சாதனை

Freelancer   / 2023 செப்டெம்பர் 18 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக அளவில் மக்களால் பாராட்டப்பட்ட சர்க்கஸ் கலைஞர்களின் கிரேஸ் குட் என்ற பெண் சிறப்பு வாய்ந்தவர். அமெரிக்காவை சேர்ந்த இவர் 18 வயதில் தனது சர்க்கஸ் பயணத்தை தொடங்கி அசாதாரண சாகசங்கள் மற்றும் துணிச்சலான நெருப்பு வளையங்களை செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவார். பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் இவரது சாகச காட்சிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

தற்போது 30 வயதாகும் கிரேஸ் குட் ஒரே நேரத்தில் அதிக நெருப்பு வளையங்களை சுழற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 8 நெருப்பு வளையங்களை தன் உடலை சுற்றி தொடர்ந்து இயக்கி அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். மேலும் பந்தின் மீது நின்று வியக்கத்தக்க வகையில் 28 ஹூலா வளையங்களை வெற்றிகரமாக சுழற்றி மற்றொரு சாதனையையும் அவர் படைத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .