2025 ஜூலை 19, சனிக்கிழமை

நிலவில் கால்வைத்தவர் 93 வயதில் கரம் பிடித்தார்

Ilango Bharathy   / 2023 ஜனவரி 25 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

1969 ஆம் ஆண்டு அப்பல்லோ 11 விண்கலம் மூலம் நிலவுக்கு பயணத்து, அதில் கால் பதித்த முதல் மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களில் ஒருவர்  ‘பஸ் ஆல்ட்ரின்‘.

இவர் தனது 93ஆவது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடிய நிலையில், அன்றே  தனது நீண்ட நாள்  காதலியையும் கரம்பிடித்துள்ளார்.  

இந்நிலையில் தனது மனைவி அன்கா ஃபௌருடன் இருக்கும் புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஆல்ட்ரின் ”நாங்கள் இருவரும்  திருமணம் செய்துகொண்டோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

லாஸ் ஏஞ்சல்ஸில் நாங்கள்  இருவரும் எளிய முறையில் திருமணம் செய்துகொண்டோம். ஓடிப்போகும் வாலிபர்களைப் போல உற்சாகமாக இருக்கின்றோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பஸ் ஆல்ட்ரின்  மூன்று முறைத்  திருமணமாகி விவாகரத்து பெற்றவர், என்பதும் குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X