2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

நவாஷ் ஷெரீப்புக்கு 10 வருட சிறை

Editorial   / 2018 ஜூலை 07 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு, 10 ஆண்டு சிறைதண்டனை வழங்கி, நேற்று (06), பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், தேசிய கணக்கீட்டுப் பணியகம் தாக்கல் செய்த ஊழல் அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரளது மகள் மரியம் மற்றும் மருமகன் சப்தர் ஆகியோருக்கு, நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

நவாஸ் ஷெரீப்புக்கு குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் சிறைவாசம், அவரது மகள் மரியாம்க்கு குறைந்தது 7 ஆண்டுகள் மற்றும் சப்தர்க்கு 1 வரும் சிறைதண்டனை என்ற அடிப்படையிலேயே, இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர், சொத்து குவித்தமை உறுதி செய்யப்பட்டமையால், இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X