2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

நாடாளுமன்றத்துக்கு வந்தார் அன்வர்

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , மு.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேஷியாவின் அடுத்த பிரதமர் எனக் கருதப்படும் அன்வர் இப்ராஹிம், நாடாளுமன்ற இடைத் தேர்தலில் வெற்றிபெற்றிருந்த நிலையில், நாடாளுமன்றத்துக்கு நேற்று (15) சமுகமளித்தார். மீண்டும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவான அவருக்கு, பலத்த வரவேற்பு வழங்கப்பட்டது.

முன்னர் எதிரிகளாக இருந்த மஹதீர் மொஹமட்டும் அன்வர் இப்ராஹிமும் இணைந்தே, கடந்த தேர்தலில் வெற்றிபெற்றிருந்த நிலையில், பிரதமராக மஹதீர் பதவியேற்றாலும், சில ஆண்டுகளில், அன்வரே பிரதமராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், சிறையிலடைக்கப்பட்டிருந்த அன்வருக்கு, பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில், அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டுத் தேர்வாகியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X