2025 மே 06, செவ்வாய்க்கிழமை

நாய்களை வன்புணர்ந்து கொன்ற முதலை நிபுணர்

Editorial   / 2024 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பல நாய்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, பிரிட்டனின் புகழ்பெற்ற முதலை நிபுணருக்கு மொத்தம் 10 ஆண்டுகள், 5 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட செய்தி  ஆஸ்திரேலியாவில்ஒட்டுமொத்த நாட்டையே திடுக்கிடச் செய்துள்ளது.
 

முன்னணி விலங்கியல் நிபுணரான ஆடம் பிரிட்டன், விலங்குகளுடன் உடலுறவு கொள்ளுதல் மற்றும் விலங்கு வன்கொடுமை தொடர்பான 56 குற்றங்களைச் செய்ததாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

சிறார் மீதான பாலியல் துன்புறுத்தல் பதிவுகளைப் பயன்படுத்தியதற்கான நான்கு குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார்.

53 வயதான ஆடம் பிரிட்டன் விலங்குகளை இறக்கும் வரை சித்திரவதை செய்வதைப் படம் பிடித்து அவற்றைப் புனைப் பெயர்களில் ஆன்லைனில் பகிர்ந்து வந்ததாகத் தொடரப்பட்ட வழக்கை  ஆஸ்திரேலிய வடக்குப் பிரதேசத்திற்கான உச்சநீதிமன்றம் விசாரித்தது. அவரது ஒரு வீடியோவில் இருந்து துப்பு கிடைக்கும் வரை, இந்தப் பாலியல் துன்புறுத்தல்கள் பல ஆண்டுகளாகக் கவனிக்கப்படாமல் இருந்தது. ஏப்ரல் 2022ஆம் ஆண்டில் கிராமப்புறத்தில் இருக்கும் அவரது டார்வின் ப்ராபர்ட்டி என்ற இடத்தைச் சோதனையிட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அங்கு அவரது மடிக்கணினியில் சிறார் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான வீடியோ பதிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆடம் பிரிட்டன் செய்த குற்றங்களின் பெரும்பாலான விவரங்கள் வெளியிட முடியாத அளவுக்குக் கொடுமையாக இருந்தன, அதனால் “இவை நரம்பியல் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்” என தலைமை நீதிபதி மைக்கேல் கிராண்ட் நீதிமன்ற அவையில் இருந்தவர்களுக்கு முன்னெச்சரிக்கை விடுத்தார்.

அவையில் வழக்கின் உண்மைகள் வெளியிடப்பட்டபோது, பொதுமக்களில் சிலர் தாங்க முடியாமல் வெளியே விரைந்தனர். பார்வையாளர் மாடத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்கள் ஆடம் பிரிட்டனை திட்டி, அழுதனர். அவ்வப்போது அவர் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு நின்றார்.
விலங்குகளை சித்திரவதை செய்து பிரிட்டன் அடைந்த மகிழ்ச்சியானது “அருவருப்பானது" என்று நீதிபதி கிராண்ட் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X